Saturday, January 12, 2013

PONGAL !!

நாளை பொங்கல் என்கின்ற தமிழர் திருநாள் . பிறந்து 23 வருடமாய் நான் கொண்டாடியது வேறு விதம். நாளை கொண்டாட போவது வேறு விதம் . இதுவரை எப்படி இருந்தது என்று சொல்கிறேன். இப்போது எப்படி கொண்டாட போகிறேன்  என்பதை பிறகு பார்க்கலாம்.

மார்கழி மாதம்  ஒரு special ஆன மாதம்.  குளிர் நம் மனசையும் உடம்பையும் நடுங்க வைக்கும்.  நான் சைவன் இருந்தாலும் " ஹரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாய்ல மண்ணு " என வளர்க்கபட்டவன் . எனவே மார்கழி மாதத்தில் காலில் எழுந்து திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாட செல்வேன். அந்த காலை எழுந்திருப்பது தான் பெரிய சவால். அனால் அவ்வாறு சென்றால் என் மனசும் உடம்பும் ஒரு உற்சாகம் அடையும் . கூடவே school பேதமின்றி பசங்க இருப்பாங்க . அவங்க கூட பழக ஒரு நல்ல வாய்ப்பும் கூட. so, வருஷம் முழுவதும்  இந்த மாததுக்காக காத்துட்டு இருப்பேன்.

முதல் தடவ போன அப்பதான் எனக்கு பெரிய shock.அப்ப எனக்கு 8 வயசு. அண்ணனுக்கு 12. அது வரைக்கும் என் அண்ணன் வீட்ல MR.SINCERE-அ இருப்பான். எனக்கு தான்  எல்லா திட்டும். ரெண்டு பேரும் வேற வேற school . so , i  hardly know about what he  do when he  was  out of our parents sight . முதல் நாள் , என் அண்ணன் அவனோட friend பார்த்து " மயிரு , ஏன்டா இவ்ளோ late ?" அப்படின்னு கேட்டான் . "மயிரா ? " , என் அண்ணன்னா  அது  ?? . கொஞ்ச நேரம் கழித்து . "போடா நாதேறி ?" திரும்ப என் அண்ணனா இது? . வீட்ல நான் நாய்னு சொன்ன திட்டுவானே ? . திரும்ப வீட்டுக்கு வரும் பொது என் அண்ணாகிட்ட அத பத்தி கேட்ட உடனே , என் பாசமுள்ள அண்ணா எனனக்கு இளனி கேக்கமா கொடுத்தான் . அப்புறம் என் நான் அத பத்தி பேசுறேன் . நமக்கு ஒரு கைப்புள்ள சிக்கிடான்னு விட்டுட்டேன் . முதன் முதல்ல வீட்ல இருக்கற மாதிரி எல்லாரும் வெளிய இருக்க மாட்டார்கள் என கற்றது அங்க தான். அது மட்டும் இல்ல இப்போ எனக்கு ஒரு நல்ல நண்பனாய் இருக்கும் அண்ணனை புரிந்ததும் அங்க தான் .

ஊர்ல இருக்கற பெரியவன்களுக்கு இருக்கிற மரியாதையை தெரிந்து கொண்டதும் அங்க தான் . ஒரு தாத்தா இருப்பார்.அவர் விட்டை தாண்டும் பொது நல்லா பாடலைன்னா வெளிய வந்து திட்டுவார் . அதுக்காகவே நல்ல பாட முயற்சி செய்வோம் . ஊர்ல இருக்கற எல்லோரும் அவருக்கு மரியாதை தருவாங்க . என்னு எனக்கு புரியல. திருப்பாவையில் மிக சுலபமான பாடல் 3வது பாடல் தான். அதுனால அவர் விட்டை தாண்டும் போது அதை பாடுவது தான் எங்கள் வழக்கம் . அதை வெளிய வந்து ரசித்து விட்டு போவார் . அதிகாலை 4 மணிக்கு குளித்து திருத்தமாய் இருப்பார். பாட்டு பாடி முடியும் தை முதல் நாள் எங்கள் அனைவருக்கும் பாலும் பரிசும் தருவார் . தினம் காலை கோவிலுக்கு தவறாது பூ தருவார் . அவருடைய தனி மனித ஒழுக்கம் தான் அவருக்கு கிடைக்கும் மரியாதைக்கான காரணம் என தெரிந்து கொண்டேன் . நாங்கள் வராது போனாலும் அவர் தன் கடமை செய்ய தவறியது இல்லை. இப்போ அந்த தாத்தாவும் இல்ல பாட்டை ரசிப்பவரும் இல்லை தவறாக பாடின திருத்து பவரும் இல்லை . இப்போதும் சின்ன பசங்க பாடறதை கேக்குறேன் ஆனா அவங்கல guide பண்ண தான் அந்த தாத்தா இல்லை . 

என்னோட பொங்கல் எப்போதும் இந்த பாட்டு பாடறதுல போய்டும் . அப்புறம் வீட்ல அம்மா செய்ற பொங்கல் , கரும்பு சாப்பிட்ட பிறகு உலக தொலைகாட்சில முதல் முறையாக ஒரு படத்தை சன் டிவி-ல பாத்த முடியும் . அப்புறம் மாட்டு பொங்கல் அன்னைக்கு மாடு ஒற்ற திருவிழா . அதை பாக்கவே ரொம்ப exciting அ இருக்கும். என்றாவது ஒரு நாள் அந்த மாட்டுக்கு பக்கத்தில் ஆவது போனும்னு நெனச்சேன் அது நடக்காது போல. இதோ கடந்த 2 வருடமாய் hyderabad ல பொங்கல் கொண்டாடுக்கிறேன் . என்ன கொண்டாட்டம் னா ? atleast kondapur tastey tamilnadu foodhouse ல பொங்கல் சாப்பிட முயற்சி பண்றேன். மாட்டு பொங்கல் அன்று கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து code பண்றேன் . "டேய் !! அமெரிக்க காரங்க thanksgivingக்கு leave உண்டு . இது எங்க thanksgiving நு யார் கிட்ட சொல்றது ?" .  சொன்ன ஒருத்தனுக்கும் புரியாது . பணத்திற்கான இந்த தேடலில் நான் தொலைத்தது இது தான் என் தமிழ் பாரம்பரியமும் என் தமிழ் மொழியும்.  ஆனால் இங்கு நான் வேறு பல மொழியும் கலாசாரத்தையும் தெரிந்து கொள்ள முடியுது .

 எது மாறினாலும் பண்டிகைக்கான நம் மோகமும் உறவுகளுக்கான நம் பாசமும் மாறாது. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! 

No comments: